×

அரசு இசைப் பள்ளிக்கு எஸ்பிபியின் பெயரைச் சூட்டி ஆந்திர அரசு கவுரவம்

நெல்லூர்: நெல்லூர் அரசு இசைப் பள்ளிக்கு எஸ்பிபியின் பெயரைச் சூட்டி ஆந்திர அரசு கவுரவம் செய்துள்ளது. இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். எஸ்பிபி மறைவுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது, தாதா சாகேப் பால்கே விருது, அவருடைய பெயரில் தேசிய விருது எனத் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்நிலையில், முதன்முறையாக ஆந்திர அரசின் இசைப் பள்ளிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆந்திராவின் தொழில், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் எஸ்பிபி ஒரு தன்னிகரில்லா பாடகராக மதிக்கப்பட்டவர். எனவே, நெல்லூர் அரசு இசை மற்றும் நடனப் பள்ளியின் பெயரை டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடனப் பள்ளி என மாற்ற எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர அரசின் இந்த கவுரவம் எஸ்பிபி குடும்பத்தினர் மற்றும் அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த அறிவிப்புக்கு எஸ்பிபியின் மகன் சரண் தனது ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Andhra Pradesh Government ,SBP , SBP
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்