×

தைத் திருநாளுக்கு விடுமுறை என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் பழனிசாமி புகழாரம்!!

சென்னை : தைத் திருநாளுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அறிவித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்று திருவள்ளுவரால் உயர்வாய் உரைக்கப் பெற்ற உழவர்களின் பெருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 2021 ஜனவரி, 14 மற்றும் 15  தேதிகளில் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு  எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பினை மனதார வரவேற்கிறேன்.

 மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்படும் எனது தலைமையிலான அரசும் தொடர்ந்து இக்கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றது.தமிழரின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாளின் சிறப்பினை அனைவரும் அறியும் வண்ணம்  உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவித்த மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு இத்தருணத்தில் என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Palanisamy ,announcement ,holiday ,Supreme Court ,Thai Thirunal , Chief Palanisamy, Praise
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...