×

அந்தியூர் வனச்சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

அந்தியூர்: இயற்கை மற்றும் வனங்களைப் பாதுகாப்பதற்காக உலகளவிலான அமைப்பான இயற்கைக்கான பாதுகாப்பு நிதியம் உலகம் முழுவதும் காடுகளைப் பாதுகாத்திடவும், வனவிலங்குகளைப் பாதுகாத்திடவும், வனங்களிலுள்ள தாவரங்களைப் பாதுகாத்திடவும் நிதியை ஒதுக்கி வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு வனக்கோட்டத்தில் அந்தியூர், பர்கூர், தட்டக்கரை மற்றும் சென்னம்பட்டி வனச்சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிக்காக  குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரு குழுவுக்கு 4 பேர்  என வனத்துறையினர், வன உயிரின ஆர்வலர்கள்  உட்பட 155 பேர் இப்பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்வமிஜூ விஸ்வநாதன், வனச்சரகர் உத்தர சாமி மற்றும் இயற்கைக்கான பாதுகாப்பு நிதியத்தைச் சேர்ந்த அலுவலர்கள், வனத்துறை ஊழியர்களைக் கொண்ட குழுவினருடன் நேற்று வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தொடங்கி வைத்தார். நேற்று தொடர்ந்து 6 நாட்கள் 4 வனப்பகுதிகளிலும் நேரடியாக ஒரே நேரத்தில் வனவிலங்குகளை கணக்கெடுப்பு நடத்துகிறது.  இதில் கால் தடம், அதன் எச்சம், தாவரங்களின் மீதான அதன் நடமாட்டம், வனப்பகுதியில் நடமாட்டத்தை கண்காணிக்க ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள கேமராக்களைக் கொண்டும் கண்காணிக்கவுள்ளனர். அதேபோல் வனவிலங்குகளான புலி, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகளுக்குத் தேவையான விலங்குகள் வனப்பகுதியில் போதுமானதாக உள்ளதா? ஏனைய மான், யானை உள்ளிட்ட விலங்குகளுக்குத் தேவையான புல் உள்ளிட்ட தாவரங்கள் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகளுக்குத் தேவையான விலங்குகள் எண்ணிக்கையை அதிகரித்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தாவர உண்ணிகளை மேற்கொள்ளும் விலங்குகளுக்கு அதன் உணவு வகைகளை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கை குறித்தும் இந்த கணக்கெடுப்பிற்கு முடிவெடுக்கவுள்ளனர்.  6 நாட்கள் கணக்கெடுப்புக்குப் பிறகு வனவிலங்குகள் குறித்தும் அதன் எண்ணிக்கைகள் குறித்தும் வெளியிடவுள்ளனர். இதன் அடிப்படையில் 4 வனப்பகுதிகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்யப்படவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Tags : Commencement ,Anthiyur Wildlife Sanctuary , In the Anthiyur forest Wildlife census begins
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...