மயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேருடன் சாய்ந்தது

மயிலாடுதுறை: நிவர் புயல் காரணமாக மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிவர் புயல் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்றுகாலை மயிலாடுதுறை அருகே பேச்சாவடியில் திருவாரூர் சாலையில், 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, மிகப்பெரிய புளிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.

தகவலறிந்து மயிலாடுதுறை தாசில்தார் மற்றும் பெரம்பூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் இப்பகுதியில் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலையில் இதுபோன்று சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ள இன்னும் சில மரங்கள் உள்ளதால் அந்த மரங்களை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>