தங்கம் கடத்தல் வழக்கு சொப்னா, சிவசங்கருக்கு 5 நாள் போலீஸ் காவல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் சொப்னா, சரித்குமார், சிவசங்கர் ஆகியோரை 5 நாள் போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சொப்னாவும், சரித்குமாரும் திருவனந்தபுரம் சிறையிலும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் எர்ணாகுளம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நாளுக்கு நாள் முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதற்கட்ட விசாரணையில், தங்கம் கடத்தலில் சிவசங்கருக்கு தொடர்பு இல்லை என்று சொப்னா கூறி வந்தார்.

கடந்த 2 வாரத்துக்கு முன்பு சிறையில் வைத்து சுங்க இலாகா நடத்திய விசாரணையில் தங்கம் கடத்தல் குறித்து சிவசங்கருக்கு தெரியும் என்றும், அவர் உதவி செய்தார் என்றும் கூறினார். இதையடுத்து கூடுதல் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்தது. அதன்படி சிவசங்கர், சொப்னா, சரித்குமார் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சுங்க இலாகா தீர்மானித்தது. இது தொடர்பாக எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் 3 பேரையும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் 3 பேரையும் சிறையில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.

Related Stories:

>