×

“மிகமோசம்” பிரிவில் நீடிக்கும் காற்றின் தரம்

புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் நேற்று “மிக மோசம்”  பிரிவில் பதிவானதாகவும், காற்றின் வேகம் அதிகரிக்கும்பட்சத்தில் இதில் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு நேற்று காலை 9 மணியளவில் 374 ஆக இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் புதன் கிழமையன்று இது 413ஆகவும், செவ்வாயன்று 379 ஆகவும், திங்களன்று 295 ஆகவும் பதிவானதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தகவல் தெரிவித்துள்ளது. நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.4 டிகிரி செல்சியசாக பதிவானது. அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் பதிவானது. அமைதியான காற்று, குறைந்த வெப்பநிலை ஆகியவற்றின் காரணமாக மாசுபடுத்திகள் அதிகரித்து காற்றன் தரத்தை மோசமடைய செய்துள்ளதாக வான்லை மையம் தெரிவித்துள்ளது. எனவே, காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்படும்பட்சத்தில் காற்றின் தரம் மேம்படும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : When will the schools open? Information from Minister Satyender Jain
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்