கொரோனா மருந்து கிடைத்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரே மாதத்தில் தடுப்பூசி

புதுடெல்லி: கொரோனாவுக்கு மருந்து கிடைத்தால் ஒட்டுமொத்த டெல்லி மக்களுக்கும் ஒரே மாதத்தில் தடுப்பூசி போடப்படும் என்று டெல்லி நோய் தடுப்பு அதிகாரி தெரிவித்தார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்தநிலையில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி தடுப்பூசியை சேமித்து வைக்கும் பணி மற்றும் தடுப்பூசி போடும் முறை குறித்து மாநில அரசுகள் தற்போதே ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுபற்றி டெல்லி நோய்தடுப்பு அதிகாரி சுரேஷ் சேத் கூறியதாவது: டெல்லியில் கொரோனா மருந்தை சேமித்து வைக்க 600 குளிர்பதன கிடங்குகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது குழந்தைகளுக்காக நோய் தடுப்பு திட்டத்திற்கு 1800 இடங்கள் உள்ளன.

எனவே டெல்லி மக்களுக்காக கொரேனா மருந்து எவ்வளவு கிடைத்தாலும் அதை 2 டிகிரி முதல் 8 டிகிரி வரை குளிரான நிலையில் சேமித்து வைக்க முடியும். மேலும் மைனஸ் 15 டிகிரி முதல் 25 டிகிரி வரையும் நாம் அங்கு வெப்பத்தை கட்டுப்படுத்தி மாற்றி அமைக்கும் வதி உள்ளது. மேலும் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டுமானால் மத்திய அரசு உதவி வேண்டும். கொரோனா மருந்து கிடைத்தால் ஒட்டுமொத்த டெல்லி மக்களுக்கும் ஒரே மாதத்தில் தடுப்பூசி போடப்படும். அதற்கு தேவையான மருத்துவமனை ஊழியர்கள், நர்ஸ்கள் நம்மிடம் உள்ளனர். எனவே அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட ஒருமாதம் போதும். மருந்து கிடைத்துவிட்டது என்று தெரிந்தாலே போதும் டெல்லியில் உள்ள அனைத்து சுகாதார ஊழியர்களையும் 3 நாட்களில் நாம் தயார்படுத்தி விட முடியும். அவர்களுக்கு முதலில் ஊசி போடப்படும். அதை தொடர்ந்து தாமதமின்றி அத்தனை மக்களுக்கும்தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் எண்ணிக்கை 100

* 30 மருத்துவமனைகளில் 5 ஐசியூ படுக்கைக்கும் குறைவாகவே காலியாக உள்ளன.

* 71 ஐசியூ படுக்கை கொண்ட எம்ய்ஸ் முதலுதவி சிகிச்சை மையத்தில் 7 படுக்கை மட்டுமே தற்போது காலியாக உள்ளது.

* 69 படுக்கை கொண்ட சப்தர்ஜங்கில் 5 மட்டுமே காலியாக உள்ளது.

205 ஐசியூ படுக்கைகள் மட்டுமே இன்னும் காலி

டெல்லியில் கொரோனா வேகமாக பரவுவதால் மருத்துவமனைகளில் உள்ள ஐசியூ படுக்கைகள் வேகமாக நிரம்பி வழிகின்றன. டெல்லியில் மொத்தம் 2080 ஐசியூ படுக்கைகள் புதிதாக சேர்க்கப்பட்டன. இருப்பினும் 205 ஐசியூ படுக்கைகள் மட்டுமே இன்னும் காலியாக உள்ளன. 60 மருத்துவமனைகளில் அத்தனை படுக்கைகளும் நிரம்பி விட்டன. அங்கு காலியாக எந்த ஐசியூ படுக்கைகளும் இல்லை. நவம்பர் 9 முதல் 26 வரை உள்ள நாட்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 16,172ல் இரந்து 18,252ஆக உயர்ந்ததால் இந்த பிரச்னை ஏற்பட்டது.

Related Stories:

>