புதிய வாரிய, கழக தலைவர்கள் பதவியேற்பு

பெங்களூரு: மாநில அரசால் நியமனம் செய்யப்பட்ட வாரிய, கழக தலைவர்கள் பதவியேற்பு கொண்டனர்.காலியாக இருந்த 30க்கும் மேற்பட்ட வாரிய, கழகங்களுக்கு 2 நாட்களுக்கு முன் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் சுப முகூர்த்த நாளான நேற்று பொறுப்பேற்று கொண்டனர். பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழும தலைவராக எலகங்கா தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.விஷ்வநாத் பொறுப்பேற்று கொண்டார். கைவினை கலைஞர்கள் வளர்ச்சி வாரிய தலைவராக ராகவேந்திரஷெட்டியும், உப்பார வளர்ச்சி வாரிய தலைவராக கிரிஷ் உப்பாராவும், கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக ஜெயபிரகாஷ் ஹெக்டே ஆகியோர் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.

Related Stories:

>