எடியூரப்பா மீது அதிருப்தி இருப்பது உண்மை: சீனிவாசபிரசாத் எம்பி தகவல்

மைசூரு: முதல்வர் எடியூரப்பா மீது அதிருப்தி இருப்பது உண்மை தான் என்று மக்களவை உறுப்பினர் சீனிவாஸ்பிரசாத் தெரிவித்தார். ஆணையம், வாரியங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில வாரியங்களுக்கு முதல்வர் எடியூரப்பா சரியான தலைவர்களை நியமனம் செய்யவில்லை. இதனால் அவர் மீது அதிருப்தி இருப்பது உண்மை என்று மக்களவை உறுப்பினர் சீனிவாஸ் பிரசாத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: மாநில முதல்வர் எடியூரப்பா மீது எனக்கு அதிருப்தி இருப்பது உண்மை என்பதற்கு பதில் இருப்பதை தெரிவித்தேன். எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு பதில் வாரிய, ஆணைய தலைவர் பதவி வழங்குவது சரியானது தான். ஆனால் சில வாரியங்களுக்கு சரியான தலைவர்கள் நியமனம் செய்யவில்லை. இதில் சில குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மாநில முதல்வர் மாற்றம் குறித்து எனக்கு தெரியாது. இது தொடர்பாக தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் முடிவு செய்வார்கள். மாநில அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி எடியூரப்பா முடிவு எடுப்பார். முதல்வர் பதவிக்கு வந்த பின் சில நெருக்கடிகள் இருக்கும். அப்போது தாழ்மையுடன் இருக்க வேண்டும். அதிகாரத்துக்கு வந்த பின் முதல்வர் மாறியுள்ளார். அதிகாரத்துக்கு வந்த பின் சிறிய அளவுக்கு மாற்றம் ஏற்படுவது வழக்கம் என்றார்.

Related Stories:

>