சென்னை விமான நிலையம் திறப்பு 2 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது

சென்னை:  நிவர் புயல் காரணமாக 12 மணி நேரம் மூடப்பட்டிருந்த சென்னை விமானநிலையம் நேற்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் மும்பையிலிருந்து சென்னை விமானநிலையத்துக்கு 62 பயணிகளுடன் காலை 7.30 மணிக்கு தரையிறங்க வந்துகொண்டிருந்த ஏர்ஏசியா விமானம் சென்னையில் தரையிறங்காமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதேபோல டெல்லியிலிருந்து 54 பயணிகளுடன் சென்னையில் காலை 8.15 மணிக்கு தரையிறங்க வந்த ஏர்ஏசியா விமானமும்  பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.  சென்னை விமானநிலைய ஓடுபாதை பராமரிப்பு பணி நடந்து கொண்டிருப்பதால், அந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன என்று கூறப்படுகிறது.

Related Stories:

>