மழைநீர் வடிந்ததும் மின் விநியோகம் தரப்படும்: அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை: புயல் நிவாரணப் பணிகளில் சென்னையில் 90 சதவீதம் முடிந்துள்ளது, நிவர் புயல் காரணமாக ₹1.50 கோடி அளவில் சேதம் இருக்கும் என்று மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி கூறினார்.சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நிவர் புயல் காரணமாக மின்சார வாரியம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் உயிர்சேதம் இல்லாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்ட மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெரும்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் அதிகமாக இருப்பதால் மின்சாரம் முழுமையாக கொடுக்கமுடியவில்ைல. தண்ணீர் வெளியேறியவுடன் மின்சாரம் விரைவில் வழங்கப்படும். 1912 எண்ணில் புகார் அளிக்கலாம். நிவர் புயல் காரணமாக 1.50 கோடி அளவில் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது, முழுமையான கணக்குகள் இன்னும் வரவில்லை. சென்னையை பொறுத்தவரை 90 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டது. மின்வாரியம் தனியாரிடம் ஒப்படைக்கவில்லை ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் இன்டர்வியூ நடத்த சொல்லியிருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து வரும் போது அவர்களை பணி நியமனம் ெசய்து கொள்வோம். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

Related Stories:

>