நிவாரண பணியில் தொண்டர்கள் ஈடுபட கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குகிற வகையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள், காங்கிரஸ் முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நேரடியாக களத்தில் இறங்கி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிற மக்களை துன்பத்தில் இருந்து மீட்கிற வகையில் காங்கிரஸ் கட்சியினரின் சேவையை நிவாரணப் பணிகள் மூலம் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென அனைத்து காங்கிரஸ் கட்சியினரையும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

>