ஈரோடு: நிவர் புயல் காரணமாக ஈரோட்டில் இன்று நடந்த மாட்டு சந்தைக்கு பாதிக்கும் குறைவான மாடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களாக சந்தைக்கு விற்பனைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் நிவர் புயல் காரணமாக மாடுகள் வரத்து பாதியாக சரிந்தது. மேலும் வெளி மாநில, மாவட்ட வியாபாரிகளின் வருகையும் வெகுவாக பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இது குறித்து உள்ளூர் மாடு வியாபாரிகள் கூறியதாவது: மழையின் காரணமாக சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவர வேண்டிய மாடுகள் பாதி கூட வரவில்லை.