குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் எளியமுறையில் ஏகாதசி திருவிழா

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் எளிய முறையில் ஏகாதசி திருவிழா நடைபெற்றது. கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலில் ஏகாதசி திருவிழாவை நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சந்தனக்காப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றி தாமரை, கதளிப்பழம், துளசிமாலை ஆகியவை வழிபாடுகள் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

குருவாயூர் ஏகாதசி நாளில் வெகுவிமர்சையாக நடைபெறும் செண்டைவாத்யம், பஞ்சவாத்யத்துடன் கூடிய உற்சவர் மூன்று யானைகள் மீது ஊர்வலம் நடைபெரும் ஆனால் இந்தமுறை கொரோனா வைரஸ் காரணமாக சம்பரதாயப்படி ஒரு யானை மீது உற்சவர் எழுந்தருளி செண்டைவாத்யத்துடன் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் யானை மீது ஊர்வலம் கிழக்கு கோபுர வாயில் முன்பாக புறப்பட்டு கடைவீதி, பார்த்தசாரதி கோயில், திருப்பதி கோயில் வரை சென்று மதியம் உச்சிக்கால பூஜைகளுடன் திரும்பி கோயிலில் சிறப்புப்பூஜைகள் நடைபெற்றது.

இம்முறை பக்தர்களின் வருகை குறைவு காரணமாக கூட்டநெரிசல் இல்லாமல் கோயில் வளாகம் வெறிச்சோடி கிடந்தன. கொரோனா பரவல் காரணமாக அன்னதானம், கோயில் வளாகத்தில் நடைபெறும் குழந்தைகள் உணவு ஊட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

Related Stories:

>