அரசிடம் உள்ளதுபோல் எங்களிடம் கஜானா இல்லை; அரசு தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; நிவர் புயல் பாதிப்பு குறித்து கமல்ஹாசன் பேட்டி

புதுச்சேரி: மரக்காணம் இடையே நள்ளிரவில் கரையைக் கடந்த அதி தீவிர நிவர் புயலால், பலத்த சூறைக்காற்று வீசியதோடு, கனமழையும் பெய்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நிவர் என்ற புயலாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நேற்று முன்தினம் நகர்ந்து வந்தது. இந்நிலையில், அதிதீவிர புயலாக வலுப்பெற்ற நிவர் புயலின் வெளிச் சுவர் புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் புதுச்சேரிக்கும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கும் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால், புதுச்சேரி, கடலூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.

இதனிடையே புயல் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வரும் நிலையில் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல் ஹாசன் சைதாப்பேட்டையில் உள்ள முகாமில் பார்வையிட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது; நிவர் புயல் காரணமாக பல இடங்களில் குடிசை வீடுகளில் உள்ளோர் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

மக்கள் நீதி மையம் சார்பாக தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருவதாகவும், அனால் இதற்க்கு அரசுதான் முழு முயற்சிகளை மேற்கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார். பெரும்பாலான மக்கள் தங்கள் இடம் இல்லாமல் அந்த பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்து அவர்கள் தங்கி இருப்பதாகவும் அந்த இடங்களில் தற்போது இருக்க முடியாதா சூழ்நிலையில் குடிசைகள் அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்ல பட்டிருப்பதால் தங்களுடைய மொத்த வாழ்வாதாரத்தை தொலைத்து நிர்கதியாக நிற்பதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

Related Stories:

>