நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரிய பாதிப்புகள் இல்லை: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி பேட்டி

கடலூர்: நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரிய பாதிப்புகள் இல்லை என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி பேட்டியளித்தார். கடலூரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகறிது என கூறினார். நிவர் புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய தொடங்கியவுடன் மதிப்பீடு செய்யும் பணி துவங்கும் என கூறினார். பயிர்களை பொறுத்தவரை 2 நாட்களுக்கு பிறகு தான் எந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும் என தெரிவித்தார். நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவி்ல்லை என கூறினார்.

கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல்வேறு பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார். விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சி, மங்கலம்பேட்டை, ஆலடி, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், மரங்கள் அகற்றப்பட்டதுடன் மின் இணைப்பு சீர் செய்யப்படும் என கூறினார். மேலும் கடலூரில் நிவார் புயலால் ஏற்பட்ட பகுதிகளை இன்று முதல்வர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். 

Related Stories:

>