செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கனஅடியாக குறைப்பு: 5 கண்மதகுகள் வழியே நீர் வெளியேற்றம்

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் கரையை கடக்கும் போது தீவிர புயலாக வலுகுறைந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல், படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 5.000 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைவால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 10,000 கன அடியில் இருந்து 4,371 குறைந்துள்ளது. 24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 21.85 அடியாக உள்ளது. 19 மதகுகள் வழியாக நேற்று திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு, தற்போது 5 கண்மதகுகளில் இரண்டில் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் நிலையாக வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>