×

தங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு 208 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: கொரோனா பரவலை தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒரு சவரன் 43,328க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றின் அதிகபட்ச விலையாகும். இதன்பிறகு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்துவருகிறது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. கிராமுக்கு 104 குறைந்து ஒரு கிராம் 4,644க்கும், சவரனுக்கு 832 குறைந்து ஒரு சவரன் 37,152க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நகை வாங்குவோரை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.  ஒரே நாளில் ஏற்பட்ட சரிவு நேற்றும் தொடர்ந்தது. மீண்டும் நேற்று தங்கம் விலை சரிவை சந்தித்து, சவரனுக்கு 208 குறைந்தது. அதாவது ஒரு கிராமுக்கு 26 குறைந்து, ஒரு சவரன் 36,912க்கு விற்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




Tags : buyers , Gold prices fall again to 208 per razor: Jewelry buyers happy
× RELATED இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120...