செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாவில் தொடர் மழையால் 10,000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது: 4 லட்சம் நெல் மூட்டை நனைந்து சேதம்: கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

செய்யாறு: செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாக்களில் தொடர் மழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. நெற்களம்களில் 4 லட்சம் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வெம்பாக்கம் தாலுகாவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக, சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது. அதேபோல் அறுவடை செய்து நெற்களம்களில் வைத்துள்ள 4 லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடிக்கின்றனர்.

தஞ்சை மாவட்டங்களில் நேரடி நெல்கொள்முதல் திறக்கப்பட்டுள்ளதுபோல, திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் அதிகம் பயிரிடப்படும் செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாக்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டிடம் உள்ள பகுதிகளில் திறந்திருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது. மேலும், தனிநபர்கள் 75 கிலோ மூட்டை .800 முதல் 900 வரை கொள்முதல் செய்கின்ற நிலையில் அரசு 1,425க்கு கொள்முதல்  செய்யும்போது, விவசாயிகளுக்கு கூடுதலாக 525 கிடைத்திருக்கும் என தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>