மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று  தூத்துக்குடி தெற்கு மாவட்டம், உடன்குடி ஒன்றியம், அதிமுக இளைஞர் அணிச் செயலாளர் அமிர்தா எஸ்.மகேந்திரன், உடன்குடி நகர எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளரும் உடன்குடி கூட்டுறவு வங்கித் தலைவருமான அசாப் அலி பாதுஷா, திருச்செந்தூர் ஒன்றியம், மேல திருச்செந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜா, முருகன், உடன்குடி ஊராட்சி முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் நதுகர் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்டக் திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உடனிருந்தார்.

Related Stories:

>