×

நிவர் புயலால் 26 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக 24 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: காரைக்குடி- எழும்பூர்-காரைக்குடி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (02606), மதுரை- எழும்பூர்- மதுரை சிறப்புரயில் (02636, 02635), எழும்பூர்- திருச்சி-  எழும்பூர் சிறப்பு ரயில் (06795, 06796) இன்றும், நிஜாமூதின்- கன்னியாகுமரி சிறப்பு ரயில்  (06012) 28ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. மேலும் மயிலாடுதுறை- மைசூர் சிறப்பு ரயில் (06231) இன்று மயிலாடுதுறை- திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டு திருச்சி- மைசூர் இடையேயும், காரைக்கால்- எர்ணாகுளம் இடையிலான  சிறப்பு ரயில் (06187) காரைக்கால்- திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டு திருச்சி- எர்ணாகுளம் இடையேயும், கோவை- மயிலாடுதுறை- கோவை சிறப்பு ரயில் (02084, 02083) கோவை-திருச்சி இடையே மட்டும் இயக்கப்படுகிறது. அதைப்போன்று சென்னை சென்ட்ரல்- ெபங்களூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (02657) இன்று ரத்து செய்யப்படுகிறது.

அதேப்போன்று சென்ட்ரல்- கோவை- சென்ட்ரல் சிறப்பு ரயில் (02675,02676, 06027, 06028), கோவை- சென்ட்ரல்-கோவை சிறப்பு ரயில் (02680, 02679), சென்ட்ரல்- பெங்களூர்- சென்ட்ரல் ரயில் ( 06075, 06076), பெங்களூர்- சென்ட்ரல்-  பெங்களூர் சிறப்பு ரயில் (02608,02607), சென்ட்ரல்- திருப்பதி (06057), திருப்பதி- சென்ட்ரல் சிறப்பு ரயில் (06008) இன்று ரத்து செய்யப்படுகிறது. 25ம் தேதி சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் (02671), சென்ட்ரல் - கோயம்புத்தூர் (02673), 26ம் தேதி திருவனந்தபுரம் - சென்ட்ரல் (02624), மேட்டுப்பாளையம் - சென்ட்ரல் (02672) விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் சென்ட்ரல்- திருவனந்தபுரம் ரயில் (02623) சென்ட்ரல்- கோவை இடையே ரத்து செய்யப்பட்டு கோவை-திருவனந்தபுரம் இடையேயும், சென்ட்ரல்- மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில்  (02601) சென்ட்ரல்-சேலம் இடையே ரத்து செய்யப்பட்டு சேலம்-மங்களூரு இடையேயும், சென்ட்ரல்- ஆலப்புழா இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (02639) சென்ட்ரல்- ஈரோடு இடையே ரத்து செய்யப்பட்டு ஈரோடு- ஆலப்புழா இடையே இயக்கப்படும். இந்த ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணம் சம்பந்தபட்டவர்களுக்கு 6 மாதத்தில் வழங்கப்படும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : storm ,Nivar ,Southern Railway , 26 special trains canceled due to Nivar storm: Southern Railway announces
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...