×

அதிபராக தேர்வான பிடென் அறிவிப்பு: உலகத்தை வழி நடத்த மீண்டும் தயாராகி விட்டது அமெரிக்கா: தீவிரவாதத்தை வேரறுப்பதாக சூளுரை

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடென் தனது அமைச்சரவை சகாக்களை அறிமுகப்படுத்தி பேசுகையில், ‘‘அமெரிக்கா மீண்டும் உலகுக்கு தலைமை தாங்கி வழி நடத்த தயாராகி விட்டது’’ என்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டொனால்ட் டிரம்ப் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையுடன் 4 ஆண்டுகள் ஆட்சி செய்தார். சர்வதேச விவகாரங்களில் அதிக அளவில் மூக்கை நுழைக்காமல் ஒதுங்கிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். குறிப்பாக, ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பின்வாங்கிய டிரம்ப், அங்கிருந்த அமெரிக்க படைகளை கணிசமான அளவுக்கு வாபஸ் பெறச் செய்தார். உலக நாடுகள் ஒன்றிணைந்த பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில், தற்போது புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடென் மீண்டும் அமெரிக்கா உலக நாடுகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்த தயாராகி விட்டதாக அறிவித்துள்ளார். அவர் தனது சொந்த ஊரான டெலாவர் மாகாணம், வில்மிங்டனில் புதிதாக பதவியேற்க உள்ள மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சரவை சகாக்களை அறிமுகப்படுத்தினார். வெளியுறவு, பாதுகாப்பு , தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைவர், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பிற முக்கிய அமைச்சரவை பணிகளுக்கு நியமிக்கபட்டவர்களை  அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய பிடென், ‘‘அமெரிக்கா தனது கூட்டு நாடுகளை ஒதுக்கிவிடாமல், எதிரிகளை எதிர்கொள்ள தயாராகி விட்டது. அதோடு நம் மதிப்புகளை மீட்டெடுக்கவும் நாங்கள் தயாராகி விட்டோம். பல உலக தலைவர்கள் விரும்பும் வகையில், உலகளாவிய தலைமை பொறுப்பை மீண்டும் ஒருமுறை அமெரிக்கா ஏற்று வழி நடத்தும். தேவையற்ற ராணுவ மோதல்களை ஒதுக்கி, தீவிரவாதத்தை வேரறுப்போம். அதற்கான அமைச்சரவை தயாராகி விட்டது,’’ என்றார்.

Tags : Biden ,US ,world , President-elect Biden announces: US is ready to lead the world again: Terrorism
× RELATED அமெரிக்கா பால விபத்தில் பல உயிர்களை...