கனகசெட்டிகுளம் கிராமத்தில் திடீர் போராட்டத்தால் பரபரப்பு: புதுவை முதலமைச்சரை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

கனகசெட்டிகுளம்: புதுச்சேரியில் புயல் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்ற முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை கனகசெட்டிகுளம் மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்த்துறை அமைச்சருடன் கனகசெட்டிகுளத்திற்கு சென்று புயல் குறித்து ஆய்வு நடத்திய முதலமைச்சர் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை கிரேன் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு மீன்வளத்துறைக்கு உத்தரவிட்டார். அங்கிருந்து அவர் புறப்பட்ட போது முற்றுகையிட்ட மீனவர்கள் கடந்த காலங்களில் வழங்க வேண்டிய புயல் நிவாரண உதவிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

வெற்றி பெற்ற 4 ஆண்டுகளுக்கு பிறகே அமைச்சர் ஷாஜகான் தொகுதிக்கு வந்துள்ளதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர். மீன்பிடி தடைகாலநிவாரணம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>