கிருஷ்ணகிரி மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

ஜோலார்பேட்டை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், புழல் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் கடந்த மாதம் 9ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். மருத்துவரின் ஆலோசனைப்படி பேரறிவாளனுக்கு நரம்பியல் சம்பந்தமாக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டார்.

கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு சென்று சேர்ந்ததும், அங்குள்ள நியூமராலஜி சிறப்பு நிபுணர் பேரறிவாளனுக்கு சிகிச்சை அளித்தார். அங்கு சிகிச்சை முடிந்ததும் அதேபகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று அங்கு உடல்நிலை பாதித்து தங்கியுள்ள தந்தை குயில்தாசனை சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின்னர் மீண்டும் ஜோலார்பேட்டைக்கு திரும்பினார். மருத்துவமனைக்கு பேரறிவாளன் புறப்பட்டதும், தனி வாகனத்தில் அவரது தாய் அற்புதம்மாளும் உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>