×

8 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரியில் படகு சேவை தொடக்கம்: இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும்

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் படகுசேவை வழக்கம்போல் தொடங்குகிறது.  கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு  செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக சார்பில் படகுகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக படகுசேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் படகுதுறையில் படகுகள் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் தொடங்கியுள்ளது. சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

 இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்டுவருபவர்கள் படகுசேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 10ம் தேதி  நாகர்கோவிலில் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் கன்னியாகுமரியில் படகுசேவை தொடங்கும் என அறிவித்தார்.அதன்பிறகு உடனடியாக படகு சேவை தொடங்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் திடீரென நேற்று படகுசேவை தொடங்கப்பட்டது. முதல் முதலாக வெள்ளோட்டமாக குகன் படகில் 40 பயணிகள் நேற்று விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்றனர். இன்று(நவ.25)முதல் வழக்கம்போல் படகுசேவை நடைபெறும் என பூம்புகார் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் படகு போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் டிக்கெட் கவுன்டரில், வரிசையில் காத்துநிற்கும் பகுதியில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

Tags : Kanyakumari , Boat service starts in Kanyakumari after 8 months: Operates as usual from today
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!