செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: பிற மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப மதுக்கடைகளை மூடலாம்..!

செங்கல்பட்டு: நிவர் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் மாலை 5 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது.  

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் 11 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக  தமிழகம், புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் சென்னை உள்பட புயல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் உள்ள  டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக, சூழ்நிலைக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவுவை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் மாலை 5 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பிற மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப மதுக்கடைகளை மூடலாம், டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக மேலாளர்களே முடிவு செய்யலாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>