கடந்த 3 நாட்களாக குறையும் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது. உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யும் வகையில் தங்களின் கவனத்தை தங்கத்தில் முதலீடு செய்து  வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த செப்டம்பர் மாதம் முதலே தங்கத்தின் விலை  தொடர்ந்து மாற்றம் கண்டு வருகின்றது.   அந்தவகையில், தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக கிராமுக்கு ரூ.152ம், பவுனுக்கு ரூ.1,216 வரையும்  அதிகரித்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை கடந்த  வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் அதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.36,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.45 குறைந்து ரூ.4,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சரிவு விற்பனையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>