காவல் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை: கமிஷனர் நேரில் ஆய்வு

சென்னை:சென்னையில் புயல் மீட்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை உயர் அதிகாரிகள் நேற்று காலை முதலே பணிகளை தொடங்கினர். சென்னை  போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகவர்வால் உத்தரவுப்படி மாநகர காவல் துறையில் உள்ள 12 காவல் மாவட்டங்களுக்கும் பயிற்சி பெற்ற 120 காவலர்கள் அடங்கிய 12 மாநகர பேரிடர் மீட்பு குழுவினர் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், போலீஸ் கமிஷனர் நேற்று எழும்பூர் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து போக்குவரத்தை சீர் செய்தார். அங்கு பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளுடன் புயலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.

‘நிவர்’ புயல் மீட்பு பணிக்காக சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை அடையாறில் உள்ள மருதம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையத்தை 044-24343662, 044-24331074 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்.

Related Stories:

>