மின் பிரச்னைகளுக்கு தொடர்புகொள்ள 24 மணி நேர உதவி மையம்: வாரியம் அறிவிப்பு

சென்னை: நிவர் புயலின் போது, பொதுமக்கள் மின்வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிப்பதற்கு வசதியாக 24 மணி நேர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிவர் புயல் மீட்பு நடவடிக்கையாக கட்டுப்பாடு உதவி மையத்தை அமைத்துள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் கீழ்க்கண்ட தொலைபேசி மற்றும் செல்போன் எண்களை தொடர்புகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு உதவி மையத்தில் பெறப்படும் மின்சாரம் சம்பந்தமான புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories:

>