முதல்வர் ஆய்வு கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை: பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 27ம் தேதி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற இருந்தது. நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக 27ம் தேதி அன்று நடைபெறவிருந்த ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வு கூட்டம் கடந்த 25ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்து, பின்னர் 27ம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>