தமிழக கிரிக்கெட் அணி தேர்வு குழு அறிவிப்பு

சென்னை: தமிழக சீனியர் ஆண்கள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதற்கான குழுவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) அறிவித்துள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள டிஎன்சிஏ அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில்  தமிழ்நாடு சீனியர் ஆண்கள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதற்கான குழுவை டிஎன்சிஏ அறிவித்துள்ளது. அதன்படி குழுவின் தலைவராக  எஸ்.வாசுதேவன், உறுப்பினர்களாக கே.பரத்குமார், ஆர்.வெங்கடேஷ், தன்வீர் ஜாபர்,  டி.ஆர்.அரசு ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் தேர்வு செய்யும் அணி தமிழகம் சார்பில் ரஞ்சி, சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளில் விளையாடும். இத்தகவலை டிஎன்சிஏ கவுரவ செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி நேற்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>