2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்

சென்னை: மதுரையில் துணிக்கடையில் கடந்த 14ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கட்டிடம் இடிந்து உயிரிழந்த தீயணைப்பாளர்கள் கே.சிவராஜன் மற்றும் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார். தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஜாபர் சேட், இணை இயக்குநர் ப்ரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>