போக்குவரத்து ஊழியர்களுக்கு 2021ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள்

சென்னை: மாநகர் போக்குவரத்து கழகத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகர் போக்குவரத்துக்கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மாநகர் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2021ம் ஆண்டுக்கான தேசிய, பண்டிகை விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, பொங்கல் (14.1.2021), குடியரசு தினம்(26.1.2021), தமிழ்ப் புத்தாண்டு(14.4.2021), மே தினம்(1.5.2021), ரம்ஜான்(14.5.2021), சுதந்திர தினம்(15.8.2021), விநாயகர் சதுர்த்தி(10.9.2021), காந்தி ஜெயந்தி(2.10.2021), ஆயுத பூஜை(14.10.2021), தீபாவளி(4.11.2021), கிறிஸ்துமஸ்(25.12.2021) ஆகியவை விடுமுறை நாட்கள் ஆகும். இந்த விடுமுறை நாட்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழக்கத்தில் உள்ளவாறு கூடுதல் ஊதியம் வழங்கப்படும். சுதந்திர தினம் ஞயிற்றுக்கிழமையாக வருவதால் அன்றைய தினம் வார விடுமுறையிலுள்ள தலைமை அலுவலகம், நிர்வாக கிளை அலுவலகங்கள், தொழிற்கூடங்கள் ஆகிய இடங்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் ஆங்கில புத்தாண்டு(1.1.2021) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

Related Stories:

>