×

இடர்பாடு, விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தீயணைப்பு நிலையங்களை ‘தீ ஆப்’ மூலம் 10 வினாடிக்குள் தொடர்பு கொள்ளலாம்: செயலியை துவங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: தீயணைப்பு துறையின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறவும், தீ, விபத்து, வெள்ளம், ஆழ்துளைக்கிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயுக் கசிவு உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு இத்துறையை மக்கள் எளிதில் அணுகிடவும், நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையால் தீ எனும் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அலைபேசி செயலியின் மூலம், அவசர காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்பு துறையை அணுகுவதற்கும், அழைத்த 10 வினாடிக்குள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, விபத்து மற்றும் உதவி கோரும் இடத்திற்கு மிக குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தகுந்த உபகரணங்களோடு சென்று உதவுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தீ செயலியுடன் கூடிய 371 கைக்கணினிகள் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் சென்னையில் உள்ள தீக் கட்டுப்பாட்டு அறைக்கும் வழங்கப்படுகிறது. இதை முதல்வர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தீ செயலியுடன் கூடிய முதல் கைக்கணிணியை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் எம்.எஸ். ஜாபர் சேட்டிடம் வழங்கினார். இந்த செயலியை மக்கள் தங்களது அலைபேசிகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்து, விபத்து ஏற்படும்போது உடனடி தகவல் தருவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tags : Fire stations ,accidents ,Chief Minister , Fire stations can be contacted within 10 seconds through the ‘Fire App’ to report accident and accident: CM launches processor
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...