மின் கம்பங்களை கண்காணிக்க குழு சென்னையில் 52 மீட்பு படைகள் தயார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சியின் சார்பில் நடமாடும் கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் மேகநாத ரெட்டி, தலைமை பெறியாளர் நந்தக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டி: கடந்த 24 மணி நேரத்தில் 5.9 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. 176 நிவாரண மையங்களில் 77 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. ரிப்பன் மாளிகையில் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்கள் கொண்ட 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

109 இடங்களில் படகுகள், 176 நிவாரண மையங்கள், 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள், 1500 பேருக்கு சமையல் செய்யும் அளவிற்கு தேவையான பொருட்களுடன் 4 பொது சமையல் அறைகள், அம்மா உணவகங்கள், 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்கள் தயார்நிலையில் உள்ளன.மின்சார கம்பம், அறுந்து தொங்கும் மின்கம்பிகள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகளை மழைக்காலங்களில் சேதமடையாமல் இருப்பதை கண்காணிக்க குழு, 52 இடங்களில் களத்தில் நின்று பணிபுரிய தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் மாநகர பேரிடர் மீட்பு குழுக்கள் தயார்நிலையில் உள்ளன என்றார்.

Related Stories:

>