காங்கிரஸ் நிர்வாகி திடீர் நீக்கம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காங்கிரஸ் தலைமை மீது எம்.என்.விஜயசுந்தரம் அவதூறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பேசியும், தவறான கருத்துக்களை பதிவிட்டும் வருவது காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு, அதன் நன்மதிப்பை பொதுமக்களிடம் சீர்குலைக்கும் செயலாகும். எனவேவிஜயசுந்தரம், காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஒப்புதலோடு கட்சியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

Related Stories:

>