வேலை நிறுத்த போராட்டம் தொழிலாளர்களுக்கு எம்டிசி எச்சரிக்கை

சென்னை: எம்டிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சில தொழிற்சங்கங்கள்/ பேரவைகள் வரும் 26ம் தேதி ஒருநாள் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் செய்திட உள்ளதாக தெரிவித்துள்ளன. வேலைநிறுத்த போராட்டத்தில் பங்குபெறாமல், வழக்கம் போல் பணிக்கு தவறாமல் வர வேண்டும். 26ம் தேதி வழங்கப்பட்டுள்ள அனைத்து விடுப்புகளும் ரத்து செய்யப்படுகிறது. வார விடுமுறை, பணி ஓய்வில் இருப்பவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும். போராட்டம் காரணமாக பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது நிலையான விதிகளின்படி சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தூண்டி விடும் செயல்களில் ஈடுபடுகிற தொழிலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>