×

அனைத்து உள்ளாட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை; 847 ஊராட்சிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு: 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம் தயார்

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் வழங்கிய அறிவுறுத்தல்கள் பின்வருமாறு: தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளில் 847 ஊராட்சிகள் மழை வெள்ளத்தால் பாதிக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரகப் பகுதிகளிலும் பொதுமக்களை தங்க வைக்க 16,331 கட்டடங்கள் தயார்நிலையில் உள்ளன. ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 725 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளன.

அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகளில் 498 சமுதாயக் கூடங்கள், 662 கல்யாண மண்டபங்கள், 1,439 கல்விக் கூடங்களில் நிவாரண மையங்கள் தயார்நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரினை வெளியேற்றுவதற்கு 698 மின் மோட்டார்கள், 484 ஜெனரேட்டர்கள், 724 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Control room ,offices ,floods ,relief camps , Control room in all local offices; 847 panchayats likely to be affected by floods: More than 20,000 relief camps are ready
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...