×

‘இ-லோக் அதாலத்’ மூலம் 2.51 லட்சம் வழக்கு முடித்துவைப்பு: கொரோனா ஊரடங்கில் சாதனை

புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை 15 மாநிலங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட 27 லோக் அதாலத் முகாம் மூலம் 2.51 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்றம் எனப்படும் ‘லோக் அதாலத்’ முறையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக லோக் அதாலத் முகாம் நேரடியாக நடத்தப்படாமல், காணொலி காட்சி முறையில் நடத்தப்பட்டது. இது ‘இ - லோக் அதாலத்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரை 15 மாநிலங்களில் 27 ‘இ - லோக் அதலாத்’ முகாம் நடத்தப்பட்டது.

அதில், மொத்தம் 4.83 லட்சம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 2.51 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம், ரூ.1,409 கோடி அளவுக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தீர்வு தொகை அளிக்கப்பட்டது. மேலும், நவம்பர் மாதத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட ‘இ-லோக் அதாலத்’தில் 16,651 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 12,686 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.107.4 கோடி அளவுக்கு தீர்வு தொகை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Corona , 2.51 lakh cases closed by ‘e-Lok Adalat’: Corona curfew record
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...