புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

*  தயார் நிலையில் 465 அவசர ஊர்திகள்

சென்னை: புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘புயல் கரையை கடக்கும் போது பாதிக்கப்படும் மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை ,நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குழுக்கள் அமைத்து பாதிப்பு ஏற்படாமமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போது விழுந்த 90 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பட்டு அறை முக்கியமானது. இன்று விழுந்த மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. அதற்கான குழுக்கள் மண்டல வாரியாக தனியாக நியமிக்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் செய்துவருகின்றன என கூறினார். அதேபோல் நிவர் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். நாகை, கடலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் 465 அவசர ஊர்திகள் தயாராக உள்ளன என சுகாதாரத்துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அவசர ஊர்திகளை அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். 108 அவசர தேவைக்கு 044-28888105, 7338895011 என்ற எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என அமைச்சர் கூறினார்.

Related Stories:

>