×

நிவர் புயல் முன்னெச்சரிக்கை: சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 3 மடங்கு கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துக்கள்; பேரிடர் காலத்திலும் பேரம் பேசும் ஆம்னி பேருந்துக்கள்

* 3 மடங்கு அதிகம் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துக்கள்
* ஆபத்தான முறையில் ஆட்டோவில் பயணம்

சென்னை: பேருந்துக்கள் நிறுத்தப்பட்டதால் ஆம்னி பஸ்களில் சென்னை-பெரம்பலூக்கு ரூ.700 கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் கூறப்படுகிறது. பேருந்துக்கள் கிடைக்காததால் சென்னையில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரிக்கு ஆட்டோவில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஆட்டோவில் மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 7 மாவட்டங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வழக்கமாக சென்னையில் இருந்து பெரம்பலூருக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும் எனபது குறிப்பிடத்தக்கது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புயல் கரை கடந்த பின் நிலைமையை ஆய்வு செய்த பின் அரசு பேருந்து சேவை மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இன்று பிற்பகல் 2 மணி முதல் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. புயல் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு  அரசு பேருந்து சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7 மாவட்டத்திலும் அரசு மற்றும் ஆம்னி பேருந்துக்கள் மதியம் 1 மணியுடன் நிறுத்தப்பட்டன.


Tags : Omni ,outstations ,Chennai ,disaster , Chennai, 3 times fare, Omni buses
× RELATED திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்...