×

நிவர் புயல் முன்னெச்சரிக்கை: இன்று இரவு முதல் 3 நாட்களுக்கு புதுச்சேரியில் ஊரடங்கு அமல்; தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்

புதுச்சேரி: நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் உத்தரவிட்டுள்ளார். இன்று இரவு முதல் 26-ம் தேதி காலை 6 மணி வரை புதுச்சேரியில் முழ ஊரடங்கு நடைமுறைக்கு வரும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களான பால், மருந்தகம், பெட்ரோல் நிலையங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் நலன் கருதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக நாளை மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. மேலும் புதுச்சேரி மக்கள் தேவையான பொருட்கள், மெழுகுவர்த்தி, உணவு பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Nivar ,Pondicherry ,Tamil Nadu , Nivar storm, 3 days, curfew in Pondicherry
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...