×

கேரள பார் உரிமையாளர் சங்க தலைவர் பரபரப்பு: சொப்னா மது கேட்டு எனக்கு போன் செய்தார்

திருவனந்தபுரம்: தங்க ராணி சொப்னா தூதரக ஊழியர்களுக்காக உயர்ரக மது கேட்டு எனக்கு போன் செய்தார் என கேரள பார் உரிமையாளர் சங்க தலைவர் பிஜூ ரமேஷ் தெரிவித்துள்ளார். கேரள மது பார் உரிமையாளர் சங்க தலைவராக இருப்பவர் பிஜூ ரமேஷ். இவர் கூறிய குற்றச்சாட்டால் கடந்த உம்மன்சாண்டி அரசுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது. அப்போது 418 மது பார்கள் மூடப்பட்டன. இவற்றை மீண்டும் திறக்க அப்போதைய நிதித்துறை அமைச்சராக இருந்த கே.எம்.மாணி, கலால்துறை அமைச்சராக இருந்த பாபு, உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் சென்னித்தலா, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சிவகுமார் ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு புகார் கூறினார்.

இதையடுத்து அமைச்சர் கே.எம்.மாணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இவரது புகாரால் உம்மன்சாண்டி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஆட்சி மாறிய பின்னர் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்குகளை கேரள அரசு மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளது. ரமேஷ் சென்னித்தலா, பாபு, சிவகுமார் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர். இந்த நிலையில் பிஜூ ரமேஷ் திருவனந்தபுரத்தில் கூறியதாவது: மது பார் ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்துவதால் எந்த பலனும் இல்லை. கே.எம்.மாணிக்கு எதிராக முதலில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கே.எம்.மாணி முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அதன்பிறகு கே.எம்.மாணிக்குக்கு எதிராக எந்த விசாரணையும் நடக்கவில்லை. எனவே இதுகுறித்து மத்திய அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும். தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சொப்னாவை எனக்கு நன்றாக தெரியும். அவர் எனது தந்ைத வழி உறவினர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அவர் போனில் அழைத்தார். தூதரகத்தில் உள்ள சிலருக்கு உயர்ரக மது வேண்டும் என அவர் கூறினார். நான் அவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதன்பிறகு அவரது தந்தை இறந்தபோதும் மது கேட்டு ெசாப்னா என்னை தொடர்பு கொண்டார். தங்க கடத்தல் தொடர்பாக அவர் என்னிடம் எதுவும் கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : President ,Kerala Bar Owners Association , Kerala Bar Owners Association President Sensation: Sopna called me asking for wine Send feedb
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...