சைபர் குற்றங்களுக்கு எதிரான அவசர சட்டம் வாபஸ் கேரள முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கடும் எதிர்ப்பை தொடர்ந்து கேரள அரசு கொண்டு வந்த சைபர் குற்றங்களுக்கு எதிரான அவசர சட்டத்தை வாபஸ் பெறுவதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பெண்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக ஆபாச கருத்துக்கள் மற்றும் மிரட்டல்கள் விடுப்பவர்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவர கேரள அரசு தீரமானித்தது. இதற்காக கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுரவப்பட்டது. இதன்படி சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 5 வருடம் சிறை தண்டனையும் ₹10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது மட்டுமே இந்த சட்டம் பாயும் என்று ேகரள அரசு தெரிவித்திருந்தது. ஆனால் பத்திரிகை மற்றும் டிவிகளில் வரும் ெசய்திகளுக்கு எதிராக கூட வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு கேரளா மட்டுமன்றி நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உட்பட பலர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மார்க்சிஸ்ட் தேசிய பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரியும் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தினார். இதையடுத்து இந்த சட்டத்தை தற்காலிகமாக அமல்படுத்தப்போவதில்லை என்று பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ெவளியிட்ட அறிக்கையில். சமீப காலமாக சமூக ஊடகங்களில் பெண்கள் மற்றும் தனிநபருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தது. இதனால் பல குடும்பங்கள் சிதிலமடைந்தன. சிலர் தற்கொலைக்கும் முயன்றனர்.

இதனால் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்திற்கு சில தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக அதை அமல்படுத்த வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளுடன் சட்டசபையில் ஆலோசித்து தகுந்த மாற்றங்களுடன் சட்டம் அமல் படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>