×

திருப்பதி செல்லும் வழியில் ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை

சென்னை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி செல்லும் வழியில் இன்று  காலை  டில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். இதையடுத்து சென்னை பழைய விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை 6.30 மணிக்கு டில்லி பாலம் விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் புறப்படுகிறார். காலை 9.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்பு காலை 9.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி புறப்பட்டு செல்கிறார். அதன்பின்பு இன்று மாலை திருப்பதியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வருகிறார். ஜனாதிபதியை வரவேற்று வழியனுப்புகின்றனர்.

இதையடுத்து மாலை 5.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் டில்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி செல்லும் வழியில் சென்னை வருகிறார். அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே வரவில்லை. ஆனாலும் சென்னை பழைய  விமான நிலையத்தில்  நேற்று காலையிலிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் விமானம் வந்து நிற்கும் இடம், அவர் பயணிக்கவிருக்கும் ஹெலிகாப்டர்கள் நிற்கும் பகுதிகள் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதோடு பழைய விமான நிலையத்தில் பணி, மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஊழியர்கள் அனைவரையும் பலத்த சோதனைகளுக்கு பின்பே உள்ளே அனுமதிக்கின்றனர். உரிய பாஸ் மற்றும் அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. சென்னை பழைய விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Tags : President ,Tamil Nadu ,Tirupati , President arrives in Tamil Nadu today on his way to Tirupati
× RELATED ஜனநாயக விரோத செயலில் மோடி ஈடுபடுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு