அதிமுகவை கைப்பற்ற அமித்ஷா முயற்சியா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

சிதம்பரம்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்றுமுன்தினம் சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகத்தின் இதயப் பகுதியாக இருப்பது சிதம்பரம் நடராஜர் கோயில். இங்கு வந்து சென்றால் நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதால் இங்கு வந்து சாமி கும்பிட்டுள்ளேன் என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர், அமித்ஷா தமிழகத்திற்கு வந்துள்ளது அதிமுகவை கைப்பற்றத்தான் என எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராஜேந்திரபாலாஜி, அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது. அதிமுக ஆண்டவன் கட்சி. அதிமுகவை அதிமுகதான் ஆளும். அதிமுகவின் நண்பர் அமித்ஷா. அவர் அதிமுகவிற்கு நல்லதுதான் செய்வார். ரஜினி அரசியலுக்கு வருவார் என நான் கூறவில்லை. வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றுதான் கூறினேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>