தஞ்சாவூர், திருவாரூர் நாகையில் யாத்திரை ரத்து: பாஜ தலைவர் அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளை செய்திட அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்ற  வேண்டும். வெற்றிவேல் யாத்திரை பயணம் 24 (இன்று), 25ம் (நாளை) தேதிகளில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளில் நடைபெறுவதாக இருந்தது. நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக, கட்சி நிர்வாகிகள் அனைவரும் புயலால் பாதிப்பு ஏற்படும் நிலையில் மக்களுக்கு உதவி பணிகளில் ஈடுபடும் பொருட்டு 24, 25ம் தேதிகளில் நடைபெற இருந்த வெற்றிவேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>