×

சில்லி பாயின்ட்...

* ‘மிகக் கடினமான தருணங்கள் உன்னை மனதளவில் மேலும் வலுப்படுத்தும் என்று சகோதரர் கோஹ்லி கூறியது ஆறுதல் அளிக்கிறது. இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல உதவுவதன் மூலமாக, மறைந்த எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்’ என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
* மிகச் சிறந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எனக்கு நானே சவாலாக இருக்க விரும்புகிறேன் என்று இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா கூறியுள்ளார்.
* மார்கஸ் ஸ்டாய்னிஸ் கடந்த ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட இப்போது 5 மடங்கு சிறப்பாக விளையாடுகிறார் என்று ஆஸி. அணி பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் பாராட்டி உள்ளார்.
* இந்திய அணியில் இப்போது உள்ள வீரர்களை பார்க்கும்போது, சூர்யகுமார் யாதவ் நிச்சயமாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் பிரையன் லாரா கூறியுள்ளார்.

Tags : Roulette Point ...
× RELATED சில்லிபாயின்ட்..