அதிமுகவை அமித்ஷா கைப்பற்றப் பார்க்கிறாரா?... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி

சிதம்பரம்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். கோயிலை விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகத்தின் இதயப் பகுதியாக இருப்பது சிதம்பரம் நடராஜர் கோயில். இங்கு வந்து சென்றால் நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதால் இங்கு வந்து சாமி கும்பிட்டுள்ளேன் என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர், அமித்ஷா தமிழகத்திற்கு வந்துள்ளது அதிமுகவை கைப்பற்றத்தான் என எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜேந்திரபாலாஜி, அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது. அதிமுக ஆண்டவன் கட்சி. அதிமுகவை அதிமுகதான் ஆளும்.

அதிமுகவின் நண்பர் அமித்ஷா. அவர் அதிமுகவிற்கு நல்லதுதான் செய்வார். ரஜினி அரசியலுக்கு வருவார் என நான் கூறவில்லை. வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்றுதான் கூறினேன். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து பணம் கட்ட முடியவில்லை என்றால் அரசே கட்டும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். இது மிகப்பெரிய விஷயம். நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>