ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மாலை 5 மணிக்கு  சந்திப்பதாக இருந்த  திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், 7 பேர் விடுதலையை பற்றி பேசுவார் என எதிர்பார்க்க பட்டிருந்த நிலையில் ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக ஒவ்வொரு மாதமும் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் மேற்கொண்டுவரும் தடுப்புநடவடிக்கைகள் குறித்த ஆலோசனை போன்றவைகளுக்காக தமிழக ஆளுநரை சந்தித்து விரிவாக எடுத்து கூறுவர். அதன்படி இன்று மாலை சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அனைத்தது பத்திரிகை மற்றும் ஊடக துறையினர் வருகைதந்துள்ளனர்.

மேலும் முதல்வர் வரக்கூடிய வழிகள் முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். அங்கே அவர் வரக்கூடிய பிரதான நுழைவாயில் முன்பாக அடையாறு துணை ஆணையர் விக்ரமன் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சந்திப்பு ரத்தனதற்கான காரணங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Related Stories:

>